காதல் சொல்ல வந்தேன்-26

காதல் சொல்ல வந்தேன்-26
நொடியில் கண்ணைப் பறிக்கும்
மின்னல்
என்று சொல்லக்கேட்டிருக்கின்றேன்
என் மனதைப் பறித்த மின்னலை
கண்கூடாய் கண்டேன்
கன்னல் அவள் பகலிலே நேரில் என் கண்முன்னே நடமாடினால்
ஜன்னல் இடைவெளியில் ஊடுருவும் இரவின் நிலவொளியாய்
நடம் ஆடினால் என் கனவிலும்
என்னத்தை சொல்ல என் நினைவின்
ஆக்ரமிப்பை
பகல்கொள்ளையில் பறிபோன என்
மனதை
விட்டுவிட்டேன் அவளிடமே ஏன்னு
கேட்டா
அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்