உன்னைத் தென்றல் பொறாமையில் பார்த்தது

உன்புன்ன கைமலர பூக்கள் சிரித்தன
உன்கை விரல்பட பூக்கள் சிவந்தன
உன்னிதழ்கள் முத்தமிட பூக்கள் சிலிர்த்தன
உன்னையோ தென்றல்பொ றாமையில் பார்த்தது
என்னைநீ யோகாத லில் !

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-20, 9:28 pm)
பார்வை : 83

மேலே