புத்தாண்டு நாள்

புத்தாண்டு நாள் (புத்தாண்டு தினம்; புதுவருடப் பிறப்பு; வருடப் பிறப்பு; New Year's Day) சனவரி 1 அன்று உரோமானியப் பேரரசில் கிமு 45 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன கிரெகோரியின் நாட்காட்டி, மற்றும் யூலியன் நாட்காட்டி ஆகியவற்றின் முதல் நாளாகும்.[1] உரோமானியர்கள் இந்தப் புத்தாண்டு நாளினை ஜானுஸ் என அழைக்கப்படும் வாயில்களின், கதவுகளின் கடவுளுக்காகவே வழங்கிவந்தனர். அந்தக் கடவுளின் பெயரைக் கொண்டே ஆண்டின் முதல் மாதமான இது ஜனவரி (சனவரி) என்று அழைக்கப்படுகிறது. இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[2][3] இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரெகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாகும். இது ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்துக் கொண்டாடப்படுகிறது.

எழுதியவர் : கட்டற்ற கலைக்களஞ்சியமான (1-Jan-20, 10:19 pm)
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே