அமிர்தம்

அமிர்தம்


மூலத்தின் மேலே சுவாதிட்டா னம்வயிறும்
ஓலமிடும் அத்தளையு டைத்துமே -- உள்ளேரும்
உந்தி மணிபூர கம்முதுகின் சந்துவழி
அந்தரமாய் ஏறிடுமாம் கேள்


மூலாதாரத்தின் மேலே சுவாதிஷ்டாணம் (அதிபதி பிரம்மன் அடிவயிறு ஆகும் அதற்கு 4 அ ங் குலம் மேலே மணி பூரகமாகும் (அதிபதி திருமால்) அப்படி உருகிய யோகியின் வி ந்து முன் சொன்ன வீடுகளுக்கு இருக்கும் தடைகளை உடைத்து மேலே ஏறுமாம்.
ஒவ்வொரு வீட்டின் தளைகள் உடைய தகு ந்த ம ந்திர ங் கள் உரு கொடுக்க வேண்டும் அப்போது தான் பூட்டியத் தளைகள் திறக்குமாம்.



கேளும் அனாதகத்த ளையுடைத்தும் ஏறிடும்
வேள்வித்தீ யாம்விந்து மார்புவரை -- கோளிலா
கண்டத் தலவிசுத்தி காண்பார் மகேசனும்
அண்டவாக் ஞைசதாசி வம்


அடுத்து மார்பு எனும் (ருத்ரனின் விட்டின் தளைகளை ம ந்திர உச்சாடம் செய்து திறக்க வி ந்து மேலே ஏறும். அதன் பிறகு அநாதகம் கழுத்தின் மகேசன் வீடும் இதேபோல திறக்க வேனும். அதற்கடுத்துடுத்து ஆக்ஞை ஆகாய விந்தின் அதிபதி (தலை) சதா சிவத்தின் வீட்டையும் அவரின் வி ந்து ம ந்திர ங் கள் சொல்லித் திறக்க ஆட்காய விந்துடன் யோகியின் வி ந்தும் சேரும் அப்பொது உயிர் பரத்தில் கல ந்து தலையின் லலாடத்திந் கீழே அமிர்தம் சொட்டும் . யொகித் தொண்டை அமிர்தம் படி ந்து வயிறில் சேர ய்ஒகியின் ஆயுள் கூடி கூடி சாகாதிருப்பானாம்.

பிண்ட விந்து + அண்ட விந்தும் = அமிர்தம்

விந்ததுவும் ஆறு தளையுடைத்து நாதவிந்தும்
மந்த சதாசிவ ஆகாய -- விந்துசேர
நெற்றி லலாடத்தில் பற்றும் அமிர்தமும்
குற்றமிலாத் தொண்டை விழும்


பஞ்ச பூதங்கள் பூமிக்கு பிரம்மன் நீருக்கு மாலவன் தீயிற்கு ருத்ரன் காற்றுக்கு மகேசன். ஆகாயத்திற்கு சதா சிவமே . அவருடைய பெண் தெய்வ ங் கள் முறையே சரஸ்வதி இலக்குமி, சக்தி மகேஸ்வரி., மனோன்மணித்தாயாம்

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-20, 11:23 pm)
Tanglish : amirtham
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே