பழைய வருடம்
பழைய வருடம்
விருத்தம்
வந்ததிந்த புதுவருடம் பறங்கி யாற்கு
நம்தமிழர் புதுவருடம் மறந்து நீயும்
விந்தைமண்ணை விடுத்துபறங் கியெப்போ பறந்தான்
ஒக்கலாய்நீ யுனதுறவு மறந்து மேனோ
அந்தபறங்கி நினைவையும் மறந்தாய் இல்லை
அன்னியனின் புதுவருடம் உனக்கேன் ஐயா
எந்தவொழுக்கம் தமிழ்வொழுக்கம் இடறல் ஏனாம்
எம்வொழுக்கத் தமிழனேநீ எமனாய்க் காரே