தேர்நீ வந்தாய் தென்றலாய்
பனிபொழியும் மார்கழிமென் காலைப் பொழுதில்
கனியிதழில் வெண்முத்துக் கள்புன் னகைபுரிய
கார்க்கூந்த லில்மல் லிகையும் சிரித்தாட
தேர்நீவந் தாய்தென்ற லாய் !
பனிபொழியும் மார்கழிமென் காலைப் பொழுதில்
கனியிதழில் வெண்முத்து பாட --நனிக்கருநல்
கார்க்கூந்த லில்மல் லிகையும் சிரித்தாட
தேர்நீவந் தாய்தென்ற லாய் !
-----முறையே இருவிகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்