குழந்தை உள்ளம்
பூஜை புனஸ்காரங்கள்
வேள்வி உபன்யாசம்
அத்தனையும் செய்கிறான்
அவன் வேதா விற்பன்னன்
ஆனால் அமைதி இல்லை
அவன் மனதில் .. ஏன்.. ஏன்?
எதைத்தேடி அலைகின்றானோ
அதை அந்த 'பரம்பொருளை'
அவன் மனதில் நிலை நிறுத்த
வழி தெரியாது அலைகின்றானே ...
அதோ அவன் குழந்தை
அவன் தாய் சொன்ன பிரஹலாதன்
துருவன் ஆகியோர் கதைகள் கேட்டு
மனதில் ஏற்றி .... நாராயண என்ற
நாமம் கூறி ...... அப்படியே அன்னையின்
மடியில் துயில்கின்றான்....
தூக்கத்தில் சிரிக்கிறான் குழந்தை
'நாராயனைக் கண்டுவிட்டானோ கனவில்
இருக்கும்..... கள்ளமில்லா குழந்தை உள்ளம்
அவன் 'வாழும் இல்லம்'
உள்ளம் தூய்மையாய் இருக்க
எண்ணம் தூய்மையாய் இருத்தல் வேண்டும்
தூய்மையில் உறைபவன் நாம் தேடி
அலையும் கடவுள்