நீந்தும் நீல நினைவுகள்❤
வெள்ளை மனதில்
நனைந்த பச்சை காற்றுகள்
இன்று நீலக் கைகள் நீட்டுகிறது....
சிந்தூர நிறமான அலைகளுக்கு
அழல்(நெருப்பு) நிறமான எழுத்துக்கள்
கரைகாண கவியை மொய்கிறது...
கருத்த மேகமான எண்ணங்களில்
அடுக்கப்படும் வெள்ளை மலைகள்
உயிரில் வடியும் செந்தூர குளிராகிறது...
விதை விட்டுப் போன
ஆரஞ்சு நிறமான கணங்களுக்குள்
நினைவான உயிரணுக்கள் ஊற்றி
குங்கும நிற கரு வளர்கிறது...
சருகிலை நிறமான வாழ்கையின் இலைகள் உள்ளத்தில் விழும் போது
ஆன்மாவில் மெளன கொடி படருகிறது...
(இஷான்)