காதல் கவிதை

🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻

*காதல் கவிதை*

*கவிஞர் கவிதை ரசிகன்*

🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻

பெண்ணே!
உன்னை
என் மறதியால்
ஜீரணிக்க முடியவில்லை💞

நான்
யாராகவோ இருயிருக்கிறேன்
நான்
நானாக வேண்டும் என்றால்
நீ
எனதாக வேண்டும்....

என் மேனிக்கு
ஆடையானவள் நீ

எல்லோருக்கும்
காதல்தான்
❓கேள்விக்குறியாக நிற்கும்
எனக்கு
காதலியே!
நீயே கேள்விக்குறியாக நிற்கிறாய்...

உனக்கு
உறவாவேன்
இல்லை
மண்ணுக்கு
உரமாவேன்....💜

திட்டம் போட்டு
காதல் வருவதும் இல்லை
சட்டம் போட்டால்
போவதும் இல்லை

நீயாக
என்னை
நேசிக்கும் வரை...
என்னை நேசி என்று
நானாக
உன்னிடம்
சொல்லப் போவதில்லை...!


*கவிதை ரசிகன்*

🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Jan-20, 3:56 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 96

மேலே