காயகற்பம் வேறு அமிர்தம் வேறு

காயகற்பம் வேறு அமிர்தம் வேறு.
காயகற்பம்
சுருக்கமாகச் சொல்கின்றேன் காய கற்பங்கள்! கார சாரங்களால் ஆனது. அது பூமியில்
விளையும் ஒரு உப்பும் 2. கடலில் விளையும் ஒரு உப்பும். 3 வானத்தில் உண்டாகும் மற்றொரு
உப்புமாகும்.. மூன்று உப்புக்களும் மேலும் சிவநீர் என்று சொல்லப்படுகிற சாரா நீரையும்
சேர்த்து செய்வது காய கற்ப மாகும்.
அமிர்தம்
மனிதன் காய கற்ப மருந்தை செய்து மூப்பெய்தாமலும் அழுகிச் சிதையாமலும்
தன்னுடைய காயத்தி நிலை நிறுத்தி க்கொள்வதற்கான மருந்தாகும். யோகி இதைச்
சாப்பிட்டு யோகத்தை(மூச்சுக் கலையை,) செய்து தன்னுடைய விந்தை முதுகுத்தண்டில்
வழியாக மேலேற்றி சந்திரமண்டலத்தில் அந்த விந்தை விந்தையாய் மாற்றப்படும்
பொருள்தான அமிர்தம். இந்த அமிர்தத்தை யோகி சாப்பிட அது யோகியின் உயிரைப்
போகவிடாது காக்கும். இதுதான்அமுதத் தாரணை

மண்டலங்கண் மூன்று மருவ உடனிருத்தி
அந்தரனை யற்சிக்கு மாறு.

மனிதனின் உடலில் , மூன்று மண்டலங்கள் அறிந்தோம் தலை சந்திர மண்டலம் 16 கலைகள்
உள்ளது மார்பு சூரிய மண்டலம் 12 கலைகள் அடங்கியது கடைசியாக வயிறு அக்னி
மண்டலம் 4 கலைகள் கொண்டதாகும்

சந்திரனுக்கு தேய் பிறை 16 கலைகள் வளர்பிறை 16 கலைகள் அறிவோம்.. இதில்
தேய்பிறை 16 கலைகள். சந்திரனின் ஆதிக்கம் மு,ழுமைப் பெற்று அமாவாசையில்
சந்திரன் என்ற சிவன், சூரியன் என்ற சக்தியின் தொடர்பை அறுத்துக்கொண்டு இருட்டா
கிப் போகிறான் (இது நவீன விஞ்சானம்,) ஆனால் சித்தர்களும் புராணங்களும்
சந்திரனும் சூரியனும் ஒன்று சேர அமாவாசை என்கிறார்கள். அவர்களின் கருத்தும்
அதே என்றாலும் அதை விளங்க வைப்பது வேறுபோலத் தோன்றும
கீழேயுள்ள பாடல்களைப் பாருங்கள்.


தோற்றுங் கதிரவ ணுன் மதி புக்கிடில்
சாற்றும மாவாசை தான்.

சித்தர்களும் கூட எவரும் தாங்கள் சொல்லும் வார்த்தையினுள் நுழைந்து ஆராய்ந்
துத் தெளிந்த பின்னால்தான் தங்களின் உள்கருத்தை உணரும்படி எழுதியுள்ளார்கள்.
மேலே யுள்ளக் குறளை கவனியுங்கள். கதிரவனின் மதி புக்கிடில். என்று உள்ளது.
இதன் விளக்கம்
சந்திரன் சூரியனிடமிருந்து மறைந்து பூமிக்குப் பின்னே வருவதை அறிவாளிகள் மட்டுமே
அறிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்கள். சூரியனுக்கு அடுத்து பூமியும்
அதற்கடுத்து பூமியின் பின்னே சந்திரன் நேர்கோட்டில் நிற்பதை மறைபொருளாக
சூரியனில் புக்கிடில் என்று எழுதியுள்ளார்கள். இதை சூரிய சந்திர பூமியின் செயல்
பாட்டை அறிந்தவனே பாவின் பொருளையும் அறியமுடியும்.

சிவபெருமான் தன்னுடைய அடையாளமாக சந்திரனைத் தன்னுடைய தலையில்
வைத்துக் கொண்டாடுகிறார். சித்தர்களும் ஆங்காங்கே சந்திரனின் விந்து என்றும்,
சந்திரனின் விந்தமுறி என்றும், சந்திரனின் விந்து நீர் என்றும் பலவாறாக சொன்னார்
களே ஒழிய அந்த அமாவாசையில் என்ன நடக்கிறது என்பது மறைபொருளாகியதால்
அதைப் புரிந்துகொள்ளாத படிக்கு எழுதி விட்டார்கள். ஆகவேதான் சித்த நூல்களை
படித்தாலும் எளிதில் அறிய முடியாமல் போனதின் காரணமாகும். சக்தியெனும் சூரியனை
விட்டு விலகிய சந்திரனின் அதிபதி சிவன் தேய் பிறையின் கடைசி 16 வது கலையில்
நமக்கெல்லாம் பூமியில் அமிர்தத்தை அள்ளி வழங்குகிறார். இதுவே பரம ரகசியமாகும்

ஈரெண் கலையி னிறைத்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.

பூதங்கள் ஐந்து, மாயன்,பிரம்மன், ருத்திரன்,மகேசன், எல்லாம் சிவமாம் ஐந்து. மால் அயன்,
,அங்கி,ரவி,மதி, யுமையோடெழாம் . சரீரம் இரத்தம் மாமிசம் மூளை, நிணம், எலும்பு
சுக்கிலம் ஆகிய ஏழும் , மண் நீர் நெருப்பு சந்திரன் காற்று சூரியன் ஆகாயம் என மூர்த்தி
களேட்டாம்.. இவையெல்லாம் ஒன்றுகூடிய விந்துவால். (சிவனார்விந்து) சரீரமெனும்
உடலும் அதற்குயிரும் உண்டாகிறது.

இந்த உடம்பின் பயனானது சங்கரனைச் சேர்தலாகும்.

ஒருபய னான துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரணைச் சார்.

மாசற்ற கொள்கை மனத்தில் படைதக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.

உயிர்க்குறுதி எல்லாமுடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு

காயகற்பம்

கடவுளை நினைத்தவுடனாப் பார்த்து அவரைச் சேரமுடியும். பலவருடங்கள் செலவழித்த
பின்னரே ஆண்டவனப் பார்க்கலாம். ஆனால் அதுவரை நமது உயிர் உடலில் தங்காதுப்
பறந்து போகும். ஆகவே காயம் என்கிற உடலை நிறுத்தினால் நமதுஉயிர் நம் உடம்பிலேயே
சேர்ந்திருக்கும். நம்முடைய காயமென்ற உடலலை அழியாமல் வைத்துக்கொண்டால் ஈசன்
நம்முடலில் தங்குவார். அதன் பிறகே யோகமென்ற மூச்சுப் பயிற்சியை நம்மால் தொடர
முடியும்.காயம் அழி.யாதிருக்க காய கற்ப மருந்தை சாப்பிடக் காயம் நிலைக்கும்,
யோகமென்ற மூச்சுக் கலைத் தொடங்க பஞ்ச பூதத்தலங்களான சுவாதிஷ்டானம்,
மணிபூரகம்,அநாதி விசுத்தி என்றத் தளங்கள் (தலங்கள்)நம் கைவசமாகும். . அதன்பிறகே
யோகம்செய்யலாம். காயத்தை நிறுத்தும் காயகற்ப மருந்து எது.? அதைத்தான் சித்தர்கள்
பலப்பல சங்கேதமொழிகளில் மக்களுக்குச் சுவடிகளில் சொல்லியுள்ளார்கள்.

காயக்கற்பமும் அமிர்தமும்..

காயகற்ப சாப்பிட்டு உடலை அழியாது உடலைக் காத்த பிறகே யோகம் செய்ய முடியும்.
யோகியின் விந்து ஆறுத் தளையுடைத்து ஆறுத்தலம் கடந்து அங்கே சந்திர மண்டலத்தில்
16 கலை விந்தமிர்தமாக மாறி அந்நாக்கின் வழியாக அமிதம் தொண்டையில் விழும்.
அமிர்தம் சாப்பிட்டுக்கொண்டே வரவரக்காயம் நிலையானதாக மாறி யோகிகள் பரமனைத்
தேடிக் கண்டு பிடிப்பர். ஆக மூச்சுக் கலையை புத்தகங்கள் படித்து செய்யும் கலையல்ல.
காயகற்பம் சாப்பிட்டு 96 தத்துவங்களான சிவதத்துவங்கள் 36யும் சக்தி தத்துவங்கள் 60
மாயாத் தத்துவங்கள் என்று சொல்லப்படுகின்ற மன அழுக்கை, தீய எண்ணங்களை;
நீக்கிய பின்னரே உள்ளமும் உடலும் மீண்டும் கள்ளங் கபடில்லாக் குழந்தை போல மாறும்.
இப்படி மாற அப்போதுதான் ஈசன் நம்முடலில் தங்குவார். அப்படி ஈசன் குடிகொண்ட உடலில்
விந்து எனும் யோகியின் உயிரை ஆறுத்தலம் கொண்டுசேர்த்து சந்திர மண்டலத்தில்
அமிர்தமாக்கி அதையவர் உண்ண உயிர் நிலை பெறும். முதலது காயகற்பம் அது
காயத்தை காக்கும். உயிரைக்காக்கும் அமிர்தமே கடவுள் அமிர்தம். இது உடலில் சேரச்சேர
நீயும் சிவனாகலாம் என்று சித்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.
ஒன்றை மட்டும்புரிந்து கொள்ளுங்கள் காய கற்ப மருந்து சாப்பிடாது யோகம் செய்வ
தென்பது பித்தலாட்டமும் பொய்யுமாகும். இதுதான் சித்தர்களின் உண்மையான கருத்தாம்.
மறுப்பவர்கள்சித்தர்களின் பாடல்களின் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்..

எழுதியவர் : பழனிராஜன் (7-Jan-20, 8:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 237

மேலே