முதுமொழிக் காஞ்சி 91

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான். 1

தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை: நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மேன்மை யடைதலை விரும்புவோன் பிறரை மேன்மைப் படுத்திச் சொல்லும் சொற்களைச் சொல்லாமல் தவிரான்.

தான் சிறப்படைய விரும்புவோன் பிறருடைய சிறப்புக்களை எடுத்துரைக்கப் பின்வாங்கமாட்டான்.

தண்டுதல் - நீங்குதல். தண்டான் - நீங்கான் - மாறான் - தவிரான்.

'தண்டாமலீவது தாளாண்மை' என்றும் 'கண்டாம் கலுழ்வ தெவன் கொலோ? தண்டா நோய், தாம்காட்ட யாம்கண் டது' என்றும் வருவனவற்றில் இச்சொல் இப்பொருளில் வருகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-20, 7:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 134

சிறந்த கட்டுரைகள்

மேலே