தைப்பிறந்தால் வழி பிறக்கும்

தைத்திருமகளே வருக!வருக!                              மண்பானையில் மாக்கோலமிட்டு மஞ்சளையும் சேர்க்க மங்களமாக
நிலமகளே வருக!வருக! 
நிலம், நீர், காற்று,
நெருப்பு, வானம்  என
பஞ்சபூதங்களுக்கும் 
நன்றி சொல்வோம்
தைத்திருமகளே வாழ்க!                                                   உலக உயிர்களுக்கு
உயிர் கொடுக்கும்
உழவே நீ வாழ்க! 
உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை என்ற
ஔவையின் வாக்கு வாழ்க!
உலகிற்கு உழவேதலை
என்பதை அறிந்தும்மானிடா
உழவை மறப்பதேனடா!
பண்டமாற்று முறை
இருந்திருந்தால் இன்று
உழவனே உலகின்
அச்சாணியாய்...
நெல்மணியை கண்டவுடன் அவன் நெஞ்சநிறைவைக் கண்டீரோ!                            
பார் புகழும்வண்ணம் அவன் ஏறுதழுவுதலை கண்டீரோ!
மண்ணோடும் மாவோடும்
அவன் உறவை  விஞ்ஞானி
விவரிக்க இயலுமோ!
வாழ்க!தமிழர் பண்பாடு!           
பொங்குக பொங்கல்!
பட்டி பழுக!பழுக!
பால் பொங்க!பொங்க!
ஸ்ரீதேவி நின்றடங்க!
பகலவன் முகம் காட்டிருக்க
பயிர்கள் செழித்திடுக!
விருந்தோம்பல் உயிரோட்டமாய்
வாழ்ந்திட தைத்திருமகளே வருக!வருக!

எழுதியவர் : முருகேசுவரன் (8-Jan-20, 9:35 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 5445

மேலே