சாதியை வளர்த்தது யார்
சாதியை வளர்த்தது யார்
காலிசெய்வேன் நானும் காலிசெய்வேன் சாதியையும்
காலிசெய்வேன் என்றார் திராவிடக் - காலிடப்பா
வாய்க்கிழியப் பேசியே தாய்நாட்டை ஆண்டயிந்தப்
பேயே வளர்த்ததுநீ ரூற்றி
தந்தைநாயக் கன்முதலி யண்ணன் பலசாதி
வந்தாரம் பித்தார கருஞ்சட்டை- - சந்தை
தியாகிகள் இல்லை திராவிடமென் றப்பொய்
சுயாட்சிமிட்டாய் பேச்சிலும் தான்
இருபதாண்டில் உண்டியலால் பெற்றார் உருவம்
தருதலை யானார் சனமும் - - பெருந்தனம்
பெற்ற இராமசாமி அற்றங்கண் டுத்தவிக்க
மற்றோர் உயர்ந்தார் வென்று
வந்ததும் சொந்தசாதிப் பேர்மாற்றம் வேளாளர்:
விந்தையிது மற்றவரும் வேளாளர் - - நிந்தித்தார்
முற்பட்டான் பிற்பட்டோ னாம்மிகப்பிற் பட்டோனாம்.
கற்றாரோ சாதி வளர்க்க
பிரித்தாளும் சூழ்ச்சி பரங்கிச்சொன் னாரோ
தரித்திரம் தொற்றத் தமிழர் - - பிரிந்தார்
பொலப்பொலவென் றேபார் பலசாதிக் கட்சி
கலகவிளை வையென்ன சொல்ல!
கூட்டநிதி யால்குழம்பைக் கூட்டி னகுடும்பம்
காட்டுகிறார் இன்கம் கணக்கையின்று - - ஆடிட்டர்
ஓடாக் குழந்தைக்கும் நடப்புக் கணக்குகள்
நாடா உலகெங்கும் சொத்து