இயற்கை

இயற்கை 💥

இனிய காலை வணக்கம் !
சேவல் கூரை மீது ஏறி நின்று 'கொக்கரக்கோ' என்று குரல் எழுப்ப
ஆழ்ந்து உறங்கிய நான் கண் விழித்தேன்.
அருனோதயம் முடிந்து
சூரியோதயம்.
வானுயர்ந்த அடர்ந்த மரங்களின் இடையே
இளஞ்சூரியனின் புண்முறுவல் கண்டேன்!
இலைதனில் உறங்கும் பணித்துளி அதை கண்டேன்!
இளங்காற்று இனிமைதனை இயன்றவரை அனுபவித்தேன்!
மார்கழி மாதத்து நடுங்கும் குளிரினை
உளமாற நேசித்தேன்!
எங்கோஆனந்த ராகம் பாடும் குயிலின் குரல் கேட்டேன்!
காக்கை சிரமபட்டு மரக்கிளை இடையில் கட்டிய கூட்டில் குயில் தன் முட்டையை காக்கைக்கு தெரியாமல் இட்டு செல்ல
காக்கை தன் முட்டையை தான் அவையும் என்று அடைகாத்ததே அதை அதிசயமாக கண்டேன்!
எப்போதும் சுறுசுறுப்போடு இயங்கும் சிட்டுக்குருவி எங்கள் வீட்டு வாசல் தேடி பறந்து வர அதற்கு அரிசி தூவி மகிழ்தேன்!
வண்ணத்து பூச்சு அது பூக்கள் மீது அமர்ந்து தேன் குடிக்கும் காட்சிதனை கண்டு மனம் வியந்தேன்!
உடல் சோர்வு முறித்து,
கால் போண போக்கில்
பார்க்கும் இடமேங்கும் பச்சை ஆடை கட்டிய அன்னை
அக்காட்சிதனை ரசித்து கொண்டே
அருவியன கொட்டும் தண்ணீரில் ஆசை தீர குளித்தேன்!
கண்ணுக்கும், கருத்துக்கும் இயற்கை அன்னை விருந்து அளிக்க,
வயிற்று பசி போக்க கண் எதிரே காய்த்த பச்சை காய்கறிகளை பறித்து நலன் போல் சமைத்து வயிறார ருசியான உணவை உண்டேன்!
உண்ட மயக்கம் தலைக்கேற
சிறிதே தின்னைதனில் படுத்து எழுந்தேன்!
அந்தி மாலை நேரம்
தென்றல் வந்து என்னை தழுவ
மஞ்சள் சூரியன் மலைக்குள் மறைய
பல வண்ணம் தீட்டப்பட்ட கீழ்வானம் வர்ணஜாலம் புரிந்தது.

மல்லிகை சிரித்து அது மாலை அதை வழி அனுப்ப
இருட்டு தன் இயல்பை வெளிப்படுத்த
இரவின் அத்தியாயம் தொடங்கியது
நீலவான வீதியில் விளக்காக வென்னிலவு உலா வர
வென் மேகமது அங்கும் இங்கும் அலைபாய
சிதறிய வெள்ளி காசுகளாக நட்சத்திரம் கூட்டம் ஜொலிக்க
கண்கொள்ளா காட்சி
காண கோடி கண்கள் வேண்டும் அக்காட்சிதனை ரசிக்க.

கிராமத்த சூழ்நிலையை
ஆசை தீர அனுபவித்தேன்!
ஒரு நாள் போதாது
அனுபவிக்க...
ஒவ்வொரு நாளும்
ஒரு அனுபவம்
அதுவே ஆனந்தத்தின் பிறப்பிடம். இருப்பிடம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (9-Jan-20, 12:09 am)
சேர்த்தது : balu
Tanglish : iyarkai
பார்வை : 412

மேலே