கடல் நீரில் இருந்தாலும் உப்பால் மீன் சாவதில்லை
கடல் நீரில் இருந்தாலும் உப்பால் மீன் சாவதில்லை !
கடல் நீரில் இருந்தாலும் உப்பால் மீன் சாவதில்லை !
உடல் நோகும் அளவிற்கு உப்புக்கள் கரிந்திருக்கும் - ஆழிக்
கடல் நீரில் இருந்தாலும் உப்பால்மீன் சாவதில்லை !!
இடர் யாவும் நிறைந்திருக்கும் இவ்வுலக வாழ்க்கையிது - பாசச்,
சுடர் வீசும் மனமிருக்கும் மனிதருக்குச் சோர்வுமில்லை !!
வரும் யாவும் வரவேற்றும் வழியேகும் முறையறிந்தும் - இங்கு,
வாழ்வு பெறும் மனிதருக்கு வாழ்வென்றும் கசப்பதில்லை !!
-------------- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி,
10 ஜனவரி 2020 - வெள்ளிக் கிழமை