வள்ளுவனே நீ யாருக்குச் சொந்தம்
வானவில் முகில் வானுக்குச் சொந்தம்
வசந்தத் தென்றல் பூந்தோட்டத்திற்குச் சொந்தம்
வள்ளுவனே நீ யாருக்குச் சொந்தம் ?
குறட்பா பா படித்து அதற்குத் தக நிற்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தம்
ஏன் குறளை எம்மொழியிலும் படிக்கும் உலகிற்கே நீ சொந்தம்
குறு நகை புரிந்து குறு இடை அசைய குறள் வழி நடக்கும்
இவளோ எனக்கு மட்டுமே சொந்தம் !