காலம்
காலம்......
ஓயாமல் சுழலும் கோளம்
பகலாய், இரவாய்
நாள், வாரம், மாதம் , வருடம்
என்று இதன் ஓட்டத்தை நாம்
கணக்கிட முயல்கின்றோம்
ஓடும் காலத்தை பிடிக்க
முயலும் நம்மை அது
தன்மேல் ஓட்டவிடாது
தூக்கி எரிகிறது ......
மனிதன் மாய்கிறான்
மீண்டும் பிறவி எடுக்க
காலம் அவனை நோக்கி சிரிக்கிறது !