என் பேனா👣

ஒவ்வொரு மனதிலும்
அப்பிக் கிடக்கும்
உணர்வுகளை பறிக்க
நினைக்கிறது என் பேனா....

உறிஞ்சி உலர்த்தப்படாத
சில வலிகளை
வடிகட்ட பார்க்கிறது
என் பேனா....

மெளன மாநாடு
நடாத்தும் இதயங்களின்
கோரிக்கைகளை குறிப்பெடுக்கிறது
என் பேனா...

இரவை நீத்துவதற்கு
உடல் பல வித்தைகள்
செய்தாலும்....
வழுக்கி வழுக்கி விழும் காட்சியில்
என் பேனாவும் எழுந்து செல்கிறது...
(இஷான்)

எழுதியவர் : இஷான் (11-Jan-20, 5:27 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 239

மேலே