பாரம்பரிய உணவுகளெல்லாம்

உழவும் அதைச்சார்ந்த தொழிலும் உலகமயமானதனால்
உழைத்த எருதெல்லாம் பல கடை எண்ணெய் சட்டியில்
விளைந்த பூமியெல்லாம் குடியிருக்கும் கட்டடமாய்
குளமும் ஏரியும் பேருந்து நிலையமும் நீதி மன்றமுமாய்
வற்றாத அருவிகளும் வளம் தந்த ஆறுகளும்
99ஆண்டு குத்தகைக்கு தொழில் தொடங்கும் ஏனையோருக்கு
பாரம்பரிய உணவுகளெல்லாம் பலசரக்கு கடைகளிலே
இயற்கை முறையென்றும் எல்லாவற்றிலும் சிறந்தது என்றும்
எவ்வளவோ விளம்பரங்கள் எல்லாமும் பொய் புரட்டாய்
அலையாடும் ஆழியிலே அழகு தாமரை வாழ்வதில்லை
அதுபோல் தான் எதுவொன்றும் அதை உணர்ந்து நடந்திடுவோம்.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-20, 10:21 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

மேலே