ஹெல்மெட்

போலீசார் - உன் செயினை பறிச்சது யாருமா?
பெண் - கருப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்
போலீசார் - வண்டியை அவன்தான் ஓட்டினானா?
பெண் - இல்ல சார்.. ஒட்டுனவன் பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான் சார்

போலீசார் - சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண் - சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு இதை கண்ணால பார்த்தாரு சார்
போலீசார் - இப்படி சொன்னை எப்படிம்மா..

பெண் - பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்
போலீசார் - அட போம்மா.. ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?
பெண் - நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...
போலீசார் - அப்ப உன்னோட லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் எடு.. உனக்கு ஃபைன் இருக்கு!

எழுதியவர் : Suruleeswari (22-Jan-20, 6:06 pm)
சேர்த்தது : அ சுருளீஸ்வரி
Tanglish : helmet
பார்வை : 128

மேலே