காதலியே
கூழாங்கல் நிறைந்த சிற்றோடை
சலசலசலவென ஓசை
புழுதேடும் மீனும் நண்டும்
வளைந்துசெல்லும் பாதை வழி
நடந்திருந்தோம்
நீயும் நானும்
விழிபார்க்க நாணமடி
உன் விரல்கோர்க்க வேர்க்குமடி
அருகாமை மட்டும் கொண்டு
அளவில்லா காதல்கொண்டு
நடந்திருந்தோம்
நீயும் நானும்
வழித்துணைக்கு நம் நிழல்கள்
கிளை அமர்ந்த பச்சைக்கிளி
இதழோரப்புன்னகையும்
குறுகுறுக்கும் உன் விழியும்
நடக்கவில்லை நம்பாதம்
பறந்திருந்தோம் நீயும் நானும்
Rafiq