காதல் சோலை

❣❣❣❣❣❣❣❣❣❣❣

*கவிஞர் கவிதை ரசிகன்*


❣❣❣❣❣❣❣❣❣❣❣

பெண்ணே! அடிவாங்கியே!
பழக்கப்பட்ட
என் கன்னத்தில்
முதன்முதலாய்
முத்தமிட்டு
நீதான் எனக்கு உணர்த்தினாய்
கன்னத்தின் அருமையை...


❤சிந்தித்தாலும்
வராத கவிதைகளை எல்லாம்
எப்படி பெண்ணே
உன் சிரிப்பிலே!
எழுதிவிட்டுப் போகிறாய்...!


💚பேதைப் பெண்ணே...!
நான்
குடை பிடித்த உடன்
மழை நின்றுவிட்டது என்று
கேட்கிறாய்...
உனக்குத் தெரியுமா?
அந்த மழை வந்தது
உன்னில்
நனைய தான என்பது...!


💜இனியவளே!
ராமர் தொட்டு
அகலிகை
பெண்ணானாள் என்பது
எல்லோருக்கும் தெரியும்...
ஆனால்
நீ தொட்ட
என்னில
ராமர் உயிர்தெழுந்தது
உனக்கே!
தெரியாது....


💙ஏய்...!.விழியே!
அவள் பார்க்கிறாள்
என்பதற்காக
நீயும் பார்க்காதே!
அவளுக்கென்ன?
பார்த்துவிட்டு
சென்றிடுவாள்...
ஏன் தெரியுமா?
அவள் விழி அரசியல்வாதியைப் போன்றது...
ஆனால்
என் விழியோ
தீவிரவாதி போன்றது...
ஏய் வெளியே!
அவள் பார்க்கிறாள் என்பதற்காக
நீயும் பார்க்காதே....!


கவிதை ரசிகன்



❣❣❣❣❣❣❣❣❣❣❣

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jan-20, 1:42 pm)
Tanglish : kaadhal solai
பார்வை : 45

மேலே