தனிமையில் இன்ப வலி

அவன் போருக்கு போகும் வீரன்போல்
என்னைக் கட்டி அணைத்து தலை முதல்
முகமெல்லாம் முத்தம் தந்தான் .......பின்னர்
என்னை விட்டுப் பிரிந்தான் பணி நிமித்தப்
பயணம் மேற்கொள்ள ......
தனித்து நின்றேன் நான் ...... நீ தனித்திருக்க வில்லை
' என்னுயிர் உன்னுள் உன்னோடு உறைகின்றதே
நீ அறியாயோ' என்று அன்று அவன் கூறியது
மனதில் அலைமோதி சொன்னது .....
கண் மூடினேன் கனவில் கண்ட
காட்சியெல்லாம் அவனே
அவன் தந்த அந்த முத்தங்களும்
அன்று அவன் சொன்ன வார்த்தைகளும்
தனிமையில் எனக்கு இன்ப வலி தந்து
என்னென்னமோ செய்தது
சொல்லமுடியலையடி தோழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 1:43 pm)
பார்வை : 122

மேலே