தேசிய பெண்குழந்தைகள் தினம்

கருவிலே எனை கலைக்காதீங்க
தப்பித்து நான் பிறந்தால்
கள்ளிப்பால் கொடுத்து கொல்லாதீங்க..
உருவெடுத்து வளரும் முன்னே
எனை உருகுலைக்க நினைக்காதீங்க

ஏழை பொண்ணா நான் இருந்தா
ஏளனமா ஏசாதீங்க
குனிந்து வளைந்து வேலை செஞ்சா
காம பார்வை வீசாதீங்க

கல்வி கற்கும் காலத்திலே
காதலுக்கு மறுப்பு சொன்னா
அமில முட்டை வீசாதீங்க
என் முக அழகை கெடுத்து
எனை நடைப்பிணமா ஆக்காதீங்க…

வேலியே பயிரை மேயும் காலமிது
சிபியே புறா தின்னும் கொடுமை இங்கு
எங்கு போகும் பெண் புறாக்கள் தஞ்சம் தேடி
காம வல்லூறுகளை வேரறுங்கள் ஒன்று கூடி…


என்றென்றும் காப்போம் பெண் குழந்தைகளை…
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Jan-20, 6:25 pm)
பார்வை : 189

மேலே