கல் பொரு சிறு நுரை

"கல் பொரு சிறு நுரை"
=======================================================ருத்ரா

"கல் பொரு சிறு நுரை"போல
என்று தான்
காதலியின் பிரிவுத்துயரம் பற்றி
அன்று பாடினான்
ஒரு சங்கப்புலவன்.
பெண்ணே!
உன் "சொல் பொரு மென் நுரை" போல்
நொறுங்கிக்கொண்டிருக்கிறேன்.
கல் என்ன கல்?
ஆயிரம் இமயத்தைக்காட்டிலும்
கனமான சொல் அல்லவா அது.
நீ சொன்ன சொல்
அத்துணை கொடுமையானது.
"இதோ
என் திருமண அழைப்பிதழ்"
என்று
சிரித்துக்கொண்டே சொல்லி
மறைந்து விட்டாயே!

===================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (29-Jan-20, 7:03 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 104

மேலே