எழுவாய் மனமே

எத்தனை இடர்கள் எத்தனைத் தடைகள்
ஏனென எவர்க்கும் புரிவ தில்லை,
அத்தனை அல்லலும் தாண்டிட வேண்டும்
அவற்றைப் படிகளாய் மாற்றிட வேண்டும்,
தத்துவம் பேசிப் பயனெதும் இல்லை
தடைகளைக் கடந்து வென்றிட வேண்டும்,
மெத்தனம் தளர்ச்சி வேண்டவே வேண்டாம்
மேலே மீண்டு எழுவாய் மனமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Jan-20, 7:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ezhuvay maname
பார்வை : 138

மேலே