இருந்தும் வலிக்கிறது

எதிர்பார்க்கவில்லை
யாருடைய பிரிவும் வலிக்கவில்லை

நீயும் அப்படித்தானே
இருந்தும்
வலிக்கிறது

எங்கே வைத்திருந்தது மனம்
அத்தனை ஆசைகளை
கண்ணீராலும் கரைக்கமுடியவில்லை
உதட்டாலும் வெளிப்படுத்தமுடியவில்லை

நீ இருந்த பொழுது
தெரியவில்லை

பிரியும்போதும் சொல்லமுடியவில்லை
இந்த இறந்துகொண்டிரும்
இதயத்தால்

எழுதியவர் : தேவி குட்டி (31-Jan-20, 5:01 pm)
பார்வை : 288

மேலே