என் தோழி
நீ என் தோழி
அலைகடல் நடுவில்
அமிழ்ந்திருக்கும் முத்துப்போல்
அற்புதமானவள் நீ..
வான்வெளி நடக்கும்
மஞ்சள் நிலாபோல
பனித்துளி சுமக்கும்
காலைமலர்போல
கார்மேகம்கண்ட
வண்ணமயில் போல
அவ்வளவு அழகானவள் நீ..
மீண்டும் சொல்கிறேன்
நீ என் தோழி..
Rafiq

