கோவில் மணியின் - மணியான தகவல்கள்

மணி -- மணிஹ்யான் தகவல்கள்

மணியை எப்போதும் ஒரே மாதிரி அடிக்கக்கூடாது

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யாதிகள் சமர்ப்பிக்கபடுகிறது என்று பொருள்

கண கண என்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று பொருள்

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது துன்று பொருள்

மெதுவாகள் ஒருபக்கமாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் .

மணியை வலது கையில் எடுத்து இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்

பிறகு இடது கையிலுருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது .

கண்டை என்பது சாமான்யமல்ல .அதில் பிரணவம் தவனிக்கிறது .தேவதைகளை வரவழைக்கிறது .

பகவானுக்கு அமுது காணும் பொது நிசப்தமாக இருக்கவேண்டும் .அமங்கலாமான பேச்சுகள் காதில் விழக்கூடாது .மணி அடித்தால் அவை காதில் விழாது .

நன்றி !

எழுதியவர் : வசிகரன்.க (2-Feb-20, 9:51 am)
பார்வை : 109

சிறந்த கட்டுரைகள்

மேலே