இதுவும் காதலா
எனக்குள்ளே எனக்குள்ளே என்னை தேடும்போது
உன்முகம் தெரிகிறதே ... என் செய்ய ?
உறவுகள் உரிமைகள் என்றே பேசிடும் போது
உன்னை மட்டும் மனம் நினைக்கிறதே என் செய்ய ?
பார்க்கும் முகம் எல்லாம் நீயாகிறாய் என் செய்ய ?
கேட்கும் ஒலியெல்லாம் உன் பேச்சாகுதே என் செய்ய ?
இறைவன் திருவுருவிலும் உன்னை பார்க்கிறேனே ;
இதயத்துடிப்பில் உன்னை உணர்கிறேனே ;
இது தான் காதலா?
இதுவும் காதலா?
உயிரின் ஒலி எனக்குள் கேட்குதே ...
உறவின் ஒளிக்கு மனம் ஏங்குதே ...
இதுவே காதலா ?