பொறுமை
தூண்டிலை ஏறி நீரில் இறக்கி
காத்திருந்தான் அகப்படும் மீன்களுக்கு
காத்து காத்து ஏதும் சிக்கவில்லை
அலுத்து செத்து தூண்டிலை மேலே
எடுத்துவிடலாம் என்ற முடிவில் நான்.....
தூண்டிலில் ஏதோ தட்டியது ...
வெளியே எடுக்க சிக்கிய பெரிய மீன்
கண்களுக்கு ஒளி தந்தது..........
பொறுமை வேண்டும் தெரிந்தது