ஆயிரம் காலத்துப் பயிர்
அகிலம் உய்யவும், அவனி சிறக்கவும்
ஆண் பெண் தாம்பத்தியம் அவசியம் என்பதாலே,
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்.
பாருக்குள்ளோர் பார்த்தறியும் விவசாயமிது.
நிச்சயமில்லா காலத்தில் தினம் கடக்கும் காட்சியிது.
பயிருக்கெல்லாம் கால நேர விளைச்சல் உண்டு.
நேரான வாழ்வெனும் பாங்கான பார் போட்டு
பண்பெனும் விதை நட்டு,
கனிசமாய் கனிவு எனும் நீர் பாய்ச்சி,
காலத்தில் நலமெனும் நன்மை பெறுதலே
நல்லோர் வாழ்வின் நாயகமாம்.
உழைப்பது கூடிட பயிர் செழித்திடும்,
உணவதைப் பகிர்ந்திட ஜெகம் சிறந்திடும்,
உணர்வது மேலிட உறவுகள் மகிழ்ந்திடும்,
உண்மைகள் உயர்ந்திட நன்மைகள் கூடிடும்.
நன்மைகள் செய்வோம் என்றென்றும்..........