ஆசிரியர் டைரி 3
இன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சியும் தந்த நாள்.....
ஆம்! உங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களோடும் இறைவனின் ஆசிர்வாதத்துடனும் மீண்டும் ஒரு நற்செயல் செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது....
இப்போதுதான் ஒரு படுசுட்டியான S.சந்தோஷ் எம் பள்ளியில் சேர்ந்தான்....
பள்ளி வாசலில் இரண்டு நாட்களாக விளையாடிக்கொண்டிருந்தான்.... அழைத்து விசாரித்தேன்...
தந்தை சென்ற மாதம் கொலை குற்றத்துக்காக பத்து ஆண்டுகள் தண்டனைப் பெற்று சிறை சென்றுள்ளார்.... தாய் எங்கிருக்கிறார் என்றத் தகவல் தெரியவில்லை.... அவனது 71 வயதான பூட்டி திருமதி.சாவித்ரி அவர்களிடம் அடைக்கலமாய் வந்து சேர்ந்துள்ளான்...
பூட்டி சாவித்ரி அவர்களை அழைத்துப் பேசினேன்.... குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்கிறேன் .... குழந்தையை தவறாமல் பள்ளிக்கூடம் மட்டும் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.... அவர் கண் கலங்கிவிட்டார்....
“இவன் நல்லா படிக்கணும்மா....அவன் அப்பன மாதிரி ஆயிடக் கூடாது” என்று அந்த மூதாட்டி அழுது கொண்டே கூறினார்... அவன் நல்லமுறையில் படித்து நல்லவனாக வளர்வதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டேன்....
குழந்தை மிகவும் தெளிவாகப் பேசுகிறான்... அவன் நல்லவனாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிபெற உங்கள் ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறேன்.....