நீ வருவாய் என

கல் உண்ட அன்னம் போல்..
உன் காதல் உண்டு வாடுகின்றேன்..
மேகம் தேடும் மயிலைப்போல்..
உன் வரவை தேடி நாடுகிறேன்..
உனை காணாது..
காலங்கள் அதிகமாகி
நினைவுகள் நிறைந்து விட..
நினைவுகள் நிறைந்து விட்டு..
ஏக்கங்கள் வளர்ந்த விட..
ஏக்கங்கள் வளர்ந்த விட்டதால்..
காதலில் நான் புதைந்து விட..
காதலில் நான் மூழ்கியதால்..
பசலைநோய் என்னுள் தொற்றிக்கொள்ள
பசலைநோய் என்னுள் நீங்குவதற்கு ..
எதிர் பார்த்து நிற்கிறேன்..
இனியவனே..
எனை காண நீ வருவாய்..என..

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (11-Feb-20, 6:34 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 334

மேலே