கால் செண்ட்டர் கைமாற்று

கால் செண்ட்டர் கைமாற்று!

வாடிக்கையாளர் - 'ஹல்லோ! இது சீ எஸ் என் எல் கஸ்டமர் கேர் தான?"

கால் செண்ட்டர் பெண் - "வணக்கம்! ஆமாங்க! இது சீ எஸ் என் ஏல் கஸ்டமர் கேர்! ஒங்களுக்கு என்ன உதவிசார் வேணும்?"

வாடிக்கையாளர் - "வணக்கம்மா! ஒரு சின்னப் பிரச்சினைமா! ஒங்களக் கேக்கலாமா வேணாமான்னு தெரீலெ!"

கால் செண்ட்டர் பெண் - "சும்மா கேளுங்க சார் சகஜமா! வாடிக்கையாளருக்கு ஒதவத் தானே நாங்க இருக்கோம்! இது இருபத்து நாலு மணி நேரமும் இயங்கர கால் செண்ட்டர்! என்ன ஒதவி வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க!"

வாடிக்கையாளர் - "அது---- வந்து---- ஒண்ணுமில்லமா! ---- வந்து, அவசரமா ஒரு ஐநூறு ரூபா வேணும்! பேட்டிஎம்ல அனுப்பரீங்களா?"


- செல்வப் பிர்யா - சந்திர மௌலீஸ்வரன் - மகி.
12 பிப்ரவரி 2020 - புதன் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Feb-20, 10:09 pm)
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே