சம்மர் லீவுலெ என்னடா செஞ்சே

சம்மர் லீவுலெ என்னடா செஞ்சே?

டீச்சர் - "எல்லாரும் கவனிங்க! இந்த சம்மர் லீவுலெ எல்லாரையும் அவங்கவங்க செஞ்ச நல்ல காரியங்கள், சமுதாயப் பணி, வீட்டில உதவினது, மத்தவங்களுக்குச் செஞ்ச உதவிக இதப் பத்தியெல்லாம் கட்டுரை எளுதி வரச் சொன்னேனில்ல? ஒவ்வொருத்தராக் கொண்டாங்க பாக்கலாம்!"

மாணவர்கள் ஒவ்வொருவராகக் கொண்டுவந்து மதிப்பெண் பெற்றுச் செல்கிறார்கள்.
நம்ம பையன், ராமராசு, கடைசியில் கொண்டுவந்து தருகிறான்.

டீச்சர் - "டேய். ராமராசு! இதென்னடா, உன்னோட கட்டுரை ஒரே ஒரு வரிதான இருக்கு?
"நான் இந்த சம்மர் லீவுலெ மொத நாள், பைக் ஓட்டப் பளகுனேன்" அப்பிடீன்னு இருக்கே?
இந்த சம்மர் லீவுலெ நீ என்ன வேர ஒண்ணுமே செய்யலியாடா?"

ராமராசு - "ஆமாங்க டீச்சர்! வேர ஒண்ணுமே செய்யல"

டீச்சர் - "என்னடா சொல்ர? மத்த நாளெல்லாம் நீ என்னதான் செஞ்சுட்டு இருந்தே?"

ராமராசு - "ஆசுப்பத்திரிலெ படுத்திருந்தேன் டீச்சர்!"

-செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி.
12 பிப்ரவரி 2020 - புதன் கிழமை)

(இது மீம்ஸ்காக அடிக்கடி வாட்ஸ் அப்பில் பகிரப் பட்டுள்ளது. எழுதியவர் யாரென்று தெரியவில்லை)

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Feb-20, 9:54 pm)
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே