முத்தம்

கூடை நிறைய வானவில்லைச்
சரம் தொடுத்து
கை நீட்டி முழம் அளக்கும்
பூக்காரியின் மலர்ப் பந்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்
பேருந்தில்
சன்னலோர தேவதையின்
படபடக்கும் இமைப்
பட்டாம்பூச்சி


முழம் பூவின் விலை
சொல்லி முடிப்பதற்குள்
மறுதலித்து
உதடு பிதுக்குகிறது
தேவதையின் ஒரு சொல்

உதட்டு ரேகையின்
நீண்ட படிவங்களில்
வழியும் ஓராயிரம்
மொழியற்ற கவிதைகளின்
தேன் மகரந்தம்

உன் வண்டு விழிகள்
மொய்த்தது போக
மீதமிருந்தால் சொட்டிச் செல் ...
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
முத்தம் .... 😘

எழுதியவர் : முகிலன் (14-Feb-20, 12:39 am)
சேர்த்தது : முகிலன்
Tanglish : mutham
பார்வை : 148

மேலே