காதலர் தினம்
இன்று காதலர்
கடவுளுக்கு கும்பாபிஷேகம்
காதலன் பட்ட துன்பங்களுக்கு
பட்டாபிஷேகம்
இன்று மட்டும்
அவள் பாதங்களைத்
தைத்த முள்
முல்லை ஆகிறது
அவள் வள்ளி
அவன் வேலன்
இன்று அவர்களுக்கு
வேலன் டைன் ஸ் நாள்
இன்று காகிதங்கள்
கடிதங்கள் ஆகும் நாள்
பூ அன்பளிப்பு
ஆகும் நாள்
கணக்கு
பண்ணியவர்களுக்கு
விடை கிடைக்கும் நாள்
கோடை பாராமல்
அலைந்தோர்
சிலருக்கு
கொடை கிடைக்கும் நாள்
சிலருக்கு
தடை கிடைக்கும் நாள்
மண்ணில் பட்ட
விதை மட்டுமல்ல
அவர்கள் கண்ணில்
பட்ட விதை கூட
கவிதையாய் முளைக்கும் நாள்