நிலாமகள்

நிலாமகள்
விடியல் என்றாலே வெளிச்சம்
அவள்விழிகள் எப்பொழுதும் குளிர்ச்சி!

தடங்கள் தெரியாத பாதங்கள்
அவள் சுமைகள் சொல்லாத பாவங்கள்!

கண்ணிமைக்கும் காலங்களில் கரைந்துபோகுமா!
ஞாபகங்கள்!
கரை கடந்து ஒதுங்கும்
நாள் பட்ட காயங்கள்!

தூரிகை சிந்திய ஓவியம் போலவள்!
துகில் கொள்ளாத நிலவின் குதூகலம்போலவள்!
மான்விழி மருண்ட நாணம்
மங்கிய நிலவொளியில்
தேனிடை சரிய நோகும்
செவ்விதழ் சிவந்து போகுதேயடி!

எழுத்து லவன் டென்மார்க்

எழுதியவர் : லவன் டென்மார்க (15-Feb-20, 2:41 am)
சேர்த்தது : லவன்
பார்வை : 65

மேலே