சுந்தரி சுந்தரி
சுந்தரி சுந்தரி... இதில்
முதல் வார்த்தை பெயரல்ல... அது
சுந்தரமான அடைமொழி...
கல்லூரியில் படிக்கையில்
கேட்டதில்லை இவர் மொழி...
இருந்தும் நேர்த்தியானவர்
இவரெனச் சொல்லும்
இவரது உடல்மொழி...
படிக்கும்போது
கல்லூரியில் தன்னை
முன்னிருத்திக் கொள்ளாத
சிவகாம சுந்தரி
பணி புரிகையில்
கல்லூரி ஒன்றிற்கு
முதல்வராய் தன்னை
முன்னிருத்திக் கொண்டார்...
மாணவர் சேர்க்கை
விண்ணப்பம் முதல்.. அவர்களின்
மாற்றுச் சான்றிதழ் வரை
கையொப்பமிட்ட கைகளுக்குச்
சொந்தக்காரர் இந்த சுந்தரி...
கரும்பலகையில் இவரது
வெள்ளை எழுத்து...
அதனால் அழகாய் மாறியது
மாணவர்களின் தலையெழுத்து...
அழகு இவரது பெயரிலும்
தோற்றத்திலும் மட்டுமல்ல...
சிறந்த நிர்வாகத்திலும்
தேர்ந்த கற்பித்தலிலும்
உயர்ந்த மனிதநேயத்திலும்தான்...
இவர் சிவில் படித்திருந்தால்
பொறியியல் படிப்பில்
ஆன்டனி விஜயாவிற்கும்
வாசுகி சிதம்பரத்திற்கும்
போட்டியாய் வந்திருப்பார்...
ஏழு எட்டாய் இருந்திருக்கும்...
வகுப்பு மேலும் ஒளிர்ந்திருக்கும்...
நீங்கள் ஏழே ஏழு கல்லூரிகள்
இருந்தபோது அதிலொன்றில்
படித்தவர்... தேசம் கல்வியில்...
தொழில்நுட்பத்தில் முன்னேற
பங்களிக்க பாங்கானவர்.. அதனால்
முனைவர் சிவகாம சுந்தரி
இன்னும் கல்விப்பணி ஆற்ற
முன் வர வேண்டும்...
ஜிஸிஇ... இசிஇ சுந்தரிக்கு
சிவில் சுந்தரராஜனின்
இனிய வாழ்த்துக்கள்...
😀💐👏👍