மனோன்மணி 722020

மனோ...
இன்று இது உனக்கு
உண்மையான பிறந்தநாள்...
ஒரு உண்மையானவனின்
பிறந்த நாள்..
உண்மையில் மகிழ்ந்து போகிறேன்..
உன் நேர்மை கண்டு
வியந்து போகிறேன்...

பிறர் மனதில் இடம்
பிடிக்கும் கலை உன்
உடன் பிறந்தது... அதனால்
மனோ என்னும் பெயர்
உனக்கு சாலச் சிறந்தது...

உலகம் பிறந்தது உனக்காக
கொள்கை உடையவன் நீ...
ஆண்டவர் மனிதனை
எதை நினைத்துப் படைத்தாரோ
அதைச் செய்கிறாய்...
அதனால் உன்னை
அவர் ஆசீர்வதிக்கிறார்...

கேலி கிண்டல் செய்தாலும்
போலி கர்வம் உனக்கில்லை...
வேலி ஒன்று உன் அன்பிற்கில்லை...

உனைப்போல் மனிதன்
இருப்பது அரிது... உண்மையாய்
இருப்பது அதனினும் அரிது... நீ
என் நண்பனாய்க் கிடைத்தது
அதனினும் அரிது...

நீயும் நானும் உடன்
இருக்கும் போது
உன் தந்தையும் தாயும்
எனக்கே முன்னுரிமை
கொடுத்ததை உணர்கிறேன்...
உலகைப் பிரியும் தருவாயிலும்
மனோவின் நெருங்கிய நண்பன்
சுந்தரராஜன் என நான்தான்
வந்திருக்கிறேன் என்பது தெரியாமல்
என்னிடமே அவர் கூறியது
அவரால் எனக்கு அணியப்பட்ட
கிரீடமாய் உணர்கிறேன்...
அதில் மனம் குளிர்ந்து போகிறேன்...

நீ பழகுவதில் இருக்கும் வேடிக்கை...
இருந்தும் நீ கொண்டிருப்பது
விவேகமான வாழ்க்கை...
எளிமையாய் இருப்பது
உன் வாடிக்கை...

நிலை மாறினால் குணம் மாறுவார்..
பொய் நீதியும் நேர்மையும் பேசுவார்..
தினம் ஜாதியும் பேதமும் கூறுவார்..
அது வேதன் விதியென்றோதுவார்...
மாறிவிட்டனர் மனிதர்கள் பலர்...
மாறிடவில்லை மனோ எனும் நண்பர்...
அதனால் அவர் நிஜத்திலும்
மனோன்மணி ராஜன் ஆகிவிட்டார்....

ஆறிலிருந்து நூறு வரை
வாழ்வின் அர்த்தம் தெரிந்து...
கள்ளம் கபடம் தவிர்த்து.. நல்ல
உள்ளம் கொண்டு வாழும்
நண்பன் மனோ நூறாண்டு
காலம் வாழ்க... நோய்நொடி
இல்லாமல் வளர்க...

வாழ்க்கைச் சித்தாந்தங்கள்
தெரிந்து வாழும் மனோ...
வானமும் வசந்தங்களும்
என்றும் உனக்கு வசமாகும்...
விகடம் உனக்கு வரமாகும்...
அன்பு நண்பனே...
எனதினிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...

அன்புடன்.... நண்பன்...
இரா.சுந்தரராஜன்...
👍😀💐🙏👏🌹🎂🧁

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (19-Feb-20, 1:08 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 112

மேலே