நட்பு

அவளும் நானும் ஒரு நீண்ட பயணம்..நடந்து கொண்டே இருந்தோம்...சிறு தொலைவில் அவள் கைகளை நான் பிடித்தேன்...
என் தோழி அவளை நான் பிரிவேன் என தெரியும்.. ஆனாலும் அவளோடு வெகு தூரம் நடக்க விரும்புகிறேன்...
அவள் என்னை அறிந்தவள்.. நான் தவறுகள் செய்யும் தருணம் அவள் கண்களை பார்க்க மாட்டேன்...உண்மையை உலறி விடுவேன்.... நிறைய நிறைய பேசுவோம்...அவள் எனக்கானவள் மட்டுமே.. புரிதலில் அவளை தவிர வேறு யாரும் என் கண்களை பார்த்து பேசியவர்கள் இல்லை.. மீண்டும் நான் பிறந்தால் அவளோடு நீண்ட தூரம் நடக்க விரும்புகிறேன்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (19-Feb-20, 5:37 pm)
சேர்த்தது : Uma
Tanglish : natpu
பார்வை : 1206

மேலே