மீண்டும் தொடர்கிறது, என் காதல் கதை💚💙
"Hello " என்ற அவனின் குரல் ..........மனதை உருக்கியது. அவன் போட்ட சில்லறை அந்த பொதுத்தொலைபேசியில் முடியும்வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். என்னை நேசிக்கும் ஒரு முழுமையான ஜீவன் அங்கு இருப்பதை நான் அப்பொழுது பெரிதாக உணரவில்லை. ஆனால் அவனை விட்டு தொலைதூரம் சென்றபின், ஏதோ புரியாத ஒரு ஏக்கம் , மனதில் பல குழப்பங்கள் ஆனால் மாறாத அவனின் மேல் உள்ள அன்பு. பள்ளியும் தொண்டாக்கியது , புதிய இடம் , புதிய நண்பர்கள் அனைத்தும் புதுமையாக இருக்க , என் எண்ணங்கள் மட்டும் பழமையாக இருந்தது. என் தமிழ் பள்ளி தந்த நினைவுகள், என் நண்பர்களின் அரட்டை , நான் நேசிக்கும் அவனோடு இருந்த தருணங்கள் , அனைத்தும் கலந்து என்னை மெதுவாய் கொன்றது. தவறு செய்தது போல் , இதயம் பதறி துடித்தது. அக்காக்கள் படிக்கும் பள்ளிக்குச் செல்ல நினைத்தது தவறு என்று தோன்றியது. அம்மா ஐயாவிடம் கூற பயம் தவறாக எண்ணிவிடுவார்களோ , அவனுடன் பேசக்கூடாது என்று கூறிவிடுவர்களோ என்ற தடுமாற்றம் . என் ஆசை மொத்ததையும் எனக்குள் வைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினேன், இருந்தும் அவனை மறக்கவில்லை, அவனின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனை நினைவுபடுத்தியது. வகுப்பறையில் நாங்கள் இருவரும் பக்கம் பக்கம் உட்கார்ந்திருப்போம் , இன்று என் பக்கம் வேறொருவர் , அவன் பக்கம் யாரோ ? .........................
மீண்டும் தொடரும் ............................💚💙