வெற்றி நிச்சயம்
வெற்றி நிச்சயம் ...
ஊமையின் கனவு
ஊருக்கு தெரியுமோ
சொன்னாலும் புரியாது
சொல்லவும் முடியாது
நெருப்பு சுடும்தான்
உத்தியோடு தொட்டால்
தரும் சுகம்தான்
உறக்கம் மட்டுமே துணையானால்
உலகம் உனைப்பார்த்து உமிழும்
முயன்று சாதிப்பாயின்
உலகம் உன்னை புகழும்
பொறாமைக்குழிக்குள் வீழ்ந்துவிட்டோம்
போராடித்தான் ஆகவேண்டும்
பறவைகளின் நம்பிக்கை
கிளைகளில் இல்லை சிறகுகளில்
யாரைநம்பி நீ வந்தாய்
விமர்சனங்களால் வெம்பிவிடாதே
உளியின் வலி பொறுத்தால் தான்
கல்லும் கலையாகும்
உன்னை மட்டும் நம்பிவிடு
உள்ளவரை முயன்றிடு
வெற்றி நிச்சயம் !
இவன் மு. ஏழுமலை