பொழிந்திடும் காதலின் ராகம்

செவ்விதழில் செவ்வானம் மெல்லச் சிரித்திடும்
செவ்வாயில் செந்தமிழ் பாக்கள் மலரும்
விழியசை யும்போதில் நைல்நதி பாயும்
பொழிந்திடும் காதலின்ரா கம் .

செவ்விதழில் செவ்வானம் மெல்லச் சிரித்திடும்
செவ்விதழ் பாடிடும் செந்தமிழ்-- செவ்வாய்
விழியசை யும்போதில் நைல்நதி பாயும்
பொழிந்திடும் காதலின்ரா கம் .

----முறையே இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-20, 11:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே