என்ன தவம் செய்தேன் யான்

என்ன தவம் செய்தேன் யான்.....
உள்ளார்ந்த அன்பை பொதிந்து
உன் பாதண்டை படையலிட்டேன்
உன்மத்தமாய் உருகி ஒல்கிட
உனையே வரமாய் எமக்குத் தந்தாய்......

முற்பிறவி தொடர் பந்தமோ...?
இப்பிறவித் தேடலின் அர்த்தமோ...?
பொற்கிழிக் கோடியாய்
சொற்பதத்தில் காதலுரைத்தாய்.....

எல்லாம் இன்று உனதாகிப்போனேன்
வல்லான் உன்முன் அதை இயம்பிட
சொல்லால் பதமாய் பிரகடனமும் செய்தேன்....
காதல் யட்சகன் உன்னிடம் கையேந்த...
கடுகளவும் யான் நாணிடவில்லை...

கோரிக்கை மனுவாக்கி காற்றிடம் ஒப்புவித்தேன்...
காதம் கடந்து உன் சாளரம்வழி வந்திடும்
வாதம் செய்யாது வந்தமடல் ஏற்றிடு....
ஊடலைக் கடந்து
திவ்விய தரிசனம் தந்திடு!

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 9:37 pm)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே