ஆள்மீக அரசியல்

அண்ணே, அஞ்சு வருசத்தில எப்படி கோடீஸ்வரர் ஆனிங்க?
@@@@@@
தம்பி இதெல்லாம் ஒரு புதிய முயற்சிக்குக் கெடச்ச வெற்றி.
@@@@@
என்ன அண்ணே சொல்லறீங்க?
@@@@@@
ஆன்மீக அரசியல் பற்றி கேள்விப்பட்டிருப்பே. ஆண்மீக அரசியல் பற்றியும் கேள்விப்பட்டிருப்ப..ஆன்மீக சாமியார்கள் பலர் கோடீஸ்வரர்களா இருக்குறாங்க. அவுங்களுக்கு அரசியல்வாதிகளோட தொடர்பு இருக்குது.
நான் நடத்தறது ஆள்மீக அரசியல்.
@@@@@
அப்பிடின்ன என்னங்க அண்ணே?
@@@@@@
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பலதரப்பட்ட மக்களைத் திரட்டி அனுப்பறது..விளம்பரத்துக்கு மாற்றுக் கட்சில இணையற வேலைக்கும் நாந்தான் ஆள் பிடிச்சு அனுப்புறேன். இதுக்கெல்லாம் இலடசக்கணக்கில பணம் கெடைக்குது. சில கட்சிக் கூட்டத்திற்கு ஒரு நூறு பேருகூட போகமாட்டாங்க. அந்தக் கூட்டத்தில தலைவர்கள் காலியாக் கிடக்கும் வாடகை நாற்காலிகளைப் பார்த்துப் பேசிட்டிருப்பாங்க. அந்த மாதிரி கட்சிக்கு ஒரு ஆயிரம் பேரைப் பிடிச்சு அனுப்பினா தலைக்கு நூறு ரூபாய் கூட்டத்துப் போற ஆளுங்களுக்கு. தலைக்கு இருநூறு ருபாய் போட்டு அந்த ஆளுங்கள அனுப்பி வைக்கிற எனக்கு இரண்டு லட்சம் சொளையா வந்துடும்.
@@@@@@@
அண்ணே உங்க ஆள்மீக அரசியல் உங்கள பல கோடிகளுக்கு அதிபதி ஆக்கப்போகுது.
@@@@@
ரொம்ப நன்றிடா தம்பி.

எழுதியவர் : மலர் (25-Feb-20, 1:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

மேலே