கார்கில் கனவுகள்

03 May - 26 july 1999
கார்கில்,
1999, ஜூலை 26, நாடெங்கும் வெற்றியின் எதிர்பார்பு, பல குடும்பங்கள் கண்கொண்ட நீரை கரைமீறவிடாமல், புண் கொண்ட நெஞ்சை பொங்க விடாமல், காத்துகிடக்கின்றன...

துப்பாக்கித் துளையிட்ட மார்பகங்களை கொண்ட பல வீரர்கள் மத்தியில் நான் தலையில் காயத்துடன் மீண்டு வந்தேன்...

பல வீரர்கள் இறந்து கிடக்கும்
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பவதற்காக டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் என் பயணத்தை மேற்கொண்டேன். தொடர்வண்டியில் பல இராணுவ வீரர்கள் கையிந்தும் காலிழந்தும் அமர்ந்த வண்ணம் இருந்தனர். நானும் நீர் கொண்ட விழியோடு நேர்கொண்ட பார்வையோடு மேற்கொண்டேன் பயணம்..
தடக் தடக் தடக் தடக் தடக் தடக்

தொடர்வண்டியில் பலரின் வணக்கங்களையும்
அக்கரையையும் கடந்து துடித்த என்
இதயத்துடிப்பின் ஓசையில் எங்கும்
இனிய உறவை தேடினேன்.
தொடர்வண்டியில் சில கல்லூரி மாணவர்கள்
பயணித்தனர், அவர்கள் என்னருகில் வந்து என்நலம் விசாரித்து அளவுகடந்த அன்பினை காட்டி என் கல்லூரி வாழ்க்கைப் பற்றி கேட்டனர், நானும் என் மனதை திறந்து சொல்லத் தொடங்கினேன்...

1994 - 1997 கல்லூரி காலம்
பள்ளிப்பருவம் கடந்து பறவையான காலம் அது. நான் 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பேன் எடுத்தேன். நான் பணக்கார குடும்பத்தைதை சேர்ந்தவன். என் தந்தை நீதிபதி, தாய் மருத்துவர், அவர்களுக்கு செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன். என் தாய்க்கு நான் சிறந்த மருத்துவராக வேண்டும் என்று விருப்பம், என் தந்தைக்கு நான் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று விருப்பம். நானோ எந்த ஆசையும் இல்லாமல் ஒரு அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை கணிதம் பட்டம் படிக்க தேர்வு செய்தேன். எளிமையான வாழ்க்கை வாழ விரும்பினேன் அதற்கு என் பெற்றோரும் சம்மதித்தனர்.

பேருந்தில் அமர்ந்து கல்லூரி சென்றேன், முதல் நாள் பல குணமுடைய மாணவர்கள் அறிமுகமானார்கள். சினேகா, மாறவர்மன், இளஞ்செழியன், சோழன், பிரியா, சிவகுரு, சுந்தரி, சுகன்யா, ஜெசி, சோஃபியா, இவர்களில் நான் வினய். தினமும் ஆனந்த கடலில் மிதந்தோம். ஒருவாரம் கடந்தது செழியன் என்ற ஒருவன் வந்து கல்லூரியில் சேர்ந்தான். அவன் அமைதியானவன். ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன். வறுமை வலியின் உருவம் அவன்.
ஏனோ தெரியவில்லை அவனிடம் பேச எனக்கு மனமில்லை. அவனும் பேசவில்லை...

ஒரு நாள், இரவில் நான் மது அருந்திவிட்டு ஹோட்டலில் உணவு உண்ணச்சென்றேன். நிதானமின்றி விழுந்துகிடந்த என்னை யாரோ ஒருவன் தூக்கி காரில் அமர்த்தி என் வீட்டில் உறங்க வைத்துவிட்டு என் பெற்றோரிடம் நான் உங்கள் மகனின் நண்பன் என்ற முகரியை கொடுத்துவிட்டு சென்றான். மறுநாள் காலையில் என் பெற்றோர் கூற நான் அவன் யார் என்ற தேடலை தொடங்க கல்லூரிச் சென்று என் நண்பர்களை விசாரித்தேன், அவர்கள் அனைவரும் நான் இல்லை என்ற பதிலை சொன்னார்கள். செழியனிடம் நேற்றிரவு நீ எங்கிருந்தாய் என்று சோழனிடம் கேக்கச்சொன்னேன். சோழன் கேட்டதற்கு செழியன், நான் வேலைக்குச்சென்றுவிட்டேன் என்று சொன்னான். ஆனாqqலும் என் மனம் தேடிக்கொண்டே இருந்தது...

அன்று இரவு மீண்டும் அந்த ஹோட்டலுக்குச் சென்றேன். உணவு உண்ண அமர்ந்தேன் அங்கு ஹோட்டலின் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து "என்ன சாப்பிடுகிறீர்கள் சார்"? என்று கேட்டார். நான் அவனைப் பார்த்து ததிகைத்து போனேன்! அவன் அவனே தான். அவன் தான் செழியன். உணவு உண்டபின் அவனுக்காக ஹோட்டலுக்கு வெளியில் காத்திருந்தேன். அவனும் வேலை நேரம் முடிந்து கையில் ஒரு பார்சலுடன் வந்தான். அவன் என்னை பார்த்து சிரித்தான், நானும் அவனைப் பார்த்து சிரித்தேன். அவனை என் காரில் அமர்த்தினேன். இந்த பார்சல் யாருக்கு என்று கேட்டேன். என் தங்கைக்கு என்று கூறினான். அவன் வீடு வரை சென்று அவனை இறக்கிவிட்டு அவன் வீட்டினில் நுழைந்தேன்.
அவன் பெற்றோரும், தங்கையும் அளவுகடந்த அன்பை காட்டினார்கள்.

மறுநாள் காலையில் இருவரும் ஒன்றாக கல்லூரிச்சென்றோம். இருவரும் நல்ல நண்பர்களானோம். அவன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையானேன். என் பெற்றோர்க்கு அவனும் ஒரு பிள்ளையானான். அவனால் நானும் மெல்ல மெல்ல மாறினேன். வாழ்வின் இலக்கைத் தேடினேன். அதே சமயம் என்னை ஜெசி காதலித்தாள். என்னை அவளிடம் சேர்த்து வைத்தான். என்னுள் காதலை விதைத்தான். என் காதலும் மலர்ந்தது.

ஜெசி, என் வாழ்வின் அர்த்தம் அவள். என்னையும், உலகை இரசிக்கச் செய்தாய்.
காதலை கண்முன்னே நிறுத்தினாள். ஓர் நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவள் என்னிடம் கேட்ட கேள்வி என்னை சிந்திக்கச் செய்தது. என் கவனம் எல்லாம் செழியன் பக்கம் திரும்பியது. செழியனைத் தேடிச்சென்று அவனிடம் கேட்டேன், நீ ஏதேனும் என்னிடம் மறைத்ததுண்டா? அதற்கு இல்லை என்றான்.
நீ யாரையாவது காதலிக்கிறாயா? என்று கேட்டேன், ஆமாம் என்றான். அவள் யார் என்று கேட்டேன், எப்படி அறிமுகமானீர்கள் என்று கேட்டேன். அவனும் அவன் காதலைச்சொல்லத் தொடங்கினான்...

நான்(செழியன்) 11 -ஆம் வகுப்பு படித்த போது இனியாளை ஒருதலையாக விரும்பினேன். அவள் அண்ணன் இன்பன் என் நண்பன். அதனால் என் காதலை யாரிடமும் சொல்லவில்லை, என்னுள்ளே வைத்து கொண்டேன். அவள் அழகானவள், 9 ஆம் வகுப்பு படித்தாள். அவளை பல பேர் விரும்பினார்கள். சைலேஷ் என்று ஒருவன் என்னிடம் வந்து, நான் இனியாளை விரும்புகிறேன் எனக்கு உதவுகிறாயா? என்று கேட்டான். நானும் ஒப்புக்கொண்டேன். நான் இனியாளிடம் கேட்டேன் "நீ யாரையாவது விரும்புகிறாயா என்று". அவளும் என்னை கைகாட்டினாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்தேன். அதை அவள் அண்ணனிடம் சொன்னேன். அவனும் சம்மதித்தான். என் காதல் சுதந்திரம் அடைந்தது. திடீரென்று ஒரு நாள் இன்பன் என்னருகில் வந்து என் தங்கையை விட்டு விடு, வேண்டாம் என்றான். நானும் திகைத்து போனேன். பரிதாபமாய் சாலையில் நின்றேன். இனியாளைப் பார்க்கவேக் கூடாது என்று சொன்னான். அதையும் மீறி பார்க்கச் சென்றேன், இனியாள் என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் விலகிச் சென்றாள்.பிறகு நான் கல்லூரி வந்துவிட்டேன் என்றான்.

கடைசியாக செழியன், இன்றும் அவளை நான் காதலிக்கிறேன் என்று அழுதுகொண்டே சொன்னான். அன்றிரவு முழுக்க என்னாள் உறங்க முடியவில்லை. செழியனுக்கு உதவிட வேண்டும் என்றும், காதலில் அவனின் நேர்மையைப் பற்றியும் எண்ணிக்கொண்டே இருந்தேன்...

மறுநாள் நான்(வினய்) செழியனை அழைத்துக்கொண்டு இனியாள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் நேரினோம். அவனும் இனியாளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள். காதல் மலர்ந்தது... திடீரென்று அவன் நாளைக்கு கல்லூரிக்கு வரமாட்டேன் என்றும், இராணுவத்திற்கு சேரப்போகிறேன் என்றும் கூறினான். நானும் வருகிறேன் அஎன்று கூறினேன். இருவரும் இராணுவத்தில் சேர்ந்தோம் என்று அந்த மாணவர்களிடம் கூறினேன். அந் மாணவர்களில் ஒருவன் என்னிடம் கேட்டான் " செழியன் சார் எங்கே?" என்று கேட்டான். அவன் தங்கையின் திருமணத்திற்காக வீடு சென்றிருக்கிறான் என்று கூறினேன். அந்த மாணவர்கள் என்னைப் பார்த்து, "நீங்க சூப்பர் சார் என்றும், நானும் இராணுவத்தில் சேர்வேன்" என்றும் கூறினான்...

‌ ஒருவழியாக சென்னை வந்தடைந்தேன். சென்னையிலிருந்து கடலூர் செல்லும் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். அதில் தொடர்வண்டியின் சோதனையாளர் என் பயணச்சீட்டை சோதித்த பிறகு என்னை தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு தெரியாது என்று கூறினேன். அவர் நான் தான் உன் நண்பன் சோழன் என்றான். அவன் அனைத்து நண்பர்களைப் பற்றியும் கூறினான். சினேகா, மாறவர்மன்,, இளஞ்செழியன், பிரியா, ஆகியோர் காவல் துரையிலும், சுந்தரி, சுகன்யா, பொறியாளர் என்றும், சிவகுரு விவசாயி என்றும் கூறினான். நான் செழியனின் காதலைப்பற்றி விசாரித்தேன். சோழனும் அவர்கள் காதல் பிரிந்து விட்டது என்றும் நாளை இனியாளுக்குத் திருமணம் என்றும் கூறினான். மனவருத்தத்துடன் உறங்கினேன்.

‌ மறுநாள் காலையில் நான் இறங்கும் தொடர்வண்டி நிலையம் வந்தது. அங்கு எனக்கொரு பேரதிர்ச்சி காத்திருந்தது, அங்கு என் நண்பர்கள், என் பெற்றோர், என் காதலி, என, ஒரு ஊரே காத்திருந்து. எனக்கு ஒன்றும் விளங்வில்லை, நான் வருகிறேன் என்று இவர்களுக்கு எப்படி தெரியும், ஒருவேலை சோழன் சொல்லியிருப்பான் என்று நினைத்துகொண்டே இறங்கினேன். நான் இறங்கியவுடன் என் காதலி என்னை கட்டி அணைத்து கதறி அழுதாள். என் நண்பர்களும் அழுதனர். எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன். அப்போது தொடர் வண்டியில் இருந்து ஒரு சவப்பெட்டியுடன் இராணுவ வீரர்கள் இறங்கினார்கள். அதைப் பார்த்து என் நண்பர்கள் அனைவரும் " ஐயோ! போயிட்டியே செழியா!... என்று கதறி அழுதனர்". செழியன் தங்கையின் திருமணத்தைக் கூடும் காணாமல் அவசர அவசரமாக சென்றது இதற்குத்தானா... என்று சிவகுரு கதறி அழுதான். இராணுவம் அழைக்கிறது நான் போயேத் தீரவேண்டும் என்று ஓடினாயே அது இதற்குத்தானா என்று என் பெற்றோரும் அழுதனர்.

‌செழியனை நிலையத்திலிருந்து ஊர்வலமாக இனியாளின் திருமணமண்டபத்தின் வழியாக எடுத்துச்சென்றோம். இனியாள் திருமணம் முடியும் வரை காத்திருந்து, திருமணம் முடிந்தவுடன் நடந்ததை தன்கணவனிடம் கூறி அழுதால்....வீடு வந்தவுடன் அவன் தாய்க்கும் தங்கைக்கும் என்ன பதில் சொல்வேன் என்று கதறி அழுதேன்.

‌அவனை 21 குண்டு முழங்க வீர அடக்கம் செய்யும் போது தூரத்தில் இருந்து ஒரு அழுகுரல்(நிறுத்துங்க, நிறுத்துங்க.......)
செழியன் காதலி இனியாள் கதறி அழுது கொண்டு கல்யாணக் கோலத்தில் கணவன் துணையோடு ஓடி வந்து
ஐயோ நான் தப்பு செய்துவிட்டேனே,
என்று அவனைப்பார்த்து கதறி அழுதாள்...
கண்ணீரிலா காணவில்லை எங்கும்
காலமானால் என்ன,
நீ காலமானால் என்ன
காதல் வாழும் கண்ணே.., கண்ணுறங்கு...

(நீதி :- பெற்றோர் திட்டியதால் தற்கொலைத்தான், காதல் தோல்வி தற்கொலைத்தான் என்போர்க்கு செழியன் ஒரு விதிவிளக்கு. இறப்பின் காரணம் இதுபோல் அமையட்டும்)
‌வீரமுழக்கம் வீரமுழக்கம்... தொடரும்.....
‌ -கல்லறை செல்வன்.

எழுதியவர் : கல்லறை செல்வன் (24-Feb-20, 6:45 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 122

மேலே