ஞாபகம் வருதே

என் முதல் அழுகை
ஞாபகமில்லை
என் முதல் சிரிப்பு
ஞாபகமில்லை
என் முதல் வார்த்தை
ஞாபகமில்லை
என் முதல் விளையாட்டு
ஞாபகமில்லை
என் முதல் பயணம்
ஞாபகமில்லை
என் முதல் சுற்றுலா
ஞாபகமில்லை
என் முதல் முத்தம்
கொடுத்ததா வாங்கியதா
ஞாபகமில்லை
இப்படி எத்தனையோ
என் முதன் முதல் எதுவுமே
ஞாபகத்தில் இல்லாதபோதும்
என் முதல் நண்பன் நீ மட்டும்
என் ஞாபகத்தை விட்டு
விலகியதும் இல்லை
உனை நான் என்றும் பிரிந்ததும் இல்லை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Feb-20, 10:50 am)
பார்வை : 789

மேலே