அந்தி மாலை மயக்கம்
ஓர் அழகிய அந்திமாலை
என்னைச் சுற்றி பூஞ்சோலை
மஞ்சள் வெயில் முகம் கண்டு
மயங்கி நின்றது
சூரியகாந்தி பூவொன்று
சின்னஞ்சிறு தூரலில்
பூஉடல் முழுதும் நனைந்து
நடிங்கிக்கொண்டு இருந்த பொழுது
வாடைக்காற்று வந்து
மென் நெஞ்சை தொட்டுச் சென்றால்
பூவிதழ்கள்தான் என்ன செய்யும்?
மஞ்சள் வெயில்தனை விழிகள் தேடும்
இரவு நெருங்க நெருங்க
வெட்கம் உடைந்து
அச்சம் மறந்து
மடம் கரைந்து
பயிர்ப்பு பயிலும்
இரவு முழுதும்....
உடை களைந்து
இடை நெளிந்து
மனம் வளைந்து
ஒன்றோடு ஒன்று
பிண்ணிப் பிணைந்து
இணைந்தே இருக்கும்
சொர்க்கத்தின் உச்சம் கண்டு
வெற்றி களிப்பில்
ஈறுடலும் உயிரும் கலைத்து
வீழ்ந்து கிடக்கும்
விடியும் வரையில்...!